சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
திருப்பூண்டி அருகே நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சி வேளாளர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என திருப்பூண்டி மேற்கு ஊராட்சி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து கீழ்வேளூர் மண்டல துணை தாசில்தார் துர்காபாய் தலைமையில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தனி நபரால் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு அடுத்த மாதம் (ஜூன்)6-ந் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது. கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், வெற்றிச்செல்வன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல், கீழையூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஞானசேகரன், திருப்பூண்டி மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராதிகாசத்யராஜ், திருப்பூண்டி மேற்கு வருவாய் ஆய்வாளர், கீழையூர்மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story