கிருஷ்ணராயபுரத்தில் வெறிநாய்கள் கடித்து 7 பேர் படுகாயம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 May 2022 11:18 PM IST (Updated: 16 May 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரத்தில் வெறிநாய்கள் கடித்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் கடைவீதி, மஞ்சமேடு, மேலல்காரதெரு உள்ளிட்ட பகுதிகளில்  திடீரென சாலைகளில் நடந்து சென்றவர்களை நெறிநாய்கள் துரத்தி, துரத்தி கடித்தது. இதில்,  மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்த நிதர்சனா (வயது6), ஜெயஸ்ரீ (12), கமலம் (58), கார்த்திக் (17), ஆனந்த் (24), தனுசு (14), கார்த்திகேயன் (17) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story