பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2022 11:24 PM IST (Updated: 16 May 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது

திருவாரூர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டார கிளை சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் நக்கீரன், நற்பணி சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில தலைவர் லெட்சுமி நாராயணன், மாவட்ட செயலாளர் ஈ.வே.ரா. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் பேசியதாவது:-
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 
சம வேலைக்கு சம ஊதியம்
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் பணிபுரியக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்குள்ளேயே ஊதிய முரண்பாடு உள்ளது. அதனை நீக்கும் வகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ் படித்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொடக்க கல்வி துறையில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் 101 மற்றும் 108 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பின் மூலம் ஆசிரியர்களை ஒன்றிணைத்து நடத்த இருந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளில் சமரசமே கிடையாது. இவைகளை பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் முருகேசன், மாநில துணை செயலாளர் ஜூலியஸ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கொரடாச்சேரி வட்டார செயலாளர் அகஸ்டின் வரவேற்றார். முடிவில், வட்டார துணை செயலாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.


Next Story