அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 May 2022 11:26 PM IST (Updated: 16 May 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

க. பரமத்தி, 
க.பரமத்தி ஒன்றியம், தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 5 மாதங்களில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத மாணவர்களை தேர்வு செய்து சிறந்த மாணவர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர். இளங்கோ கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது, கேடயங்களை வழங்கினார். இதில் இப்பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்படியும் மாணவர்கள், வீட்டுப் பாடங்களை சரியாக தொடர்ந்து செய்து வரும் மாணவர்கள், மற்றும், சீருடையில் தினமும் வரும் மாணவர்கள், என பல்வேறு முடிவுகளின் படி ஆய்வு செய்து 22 மாணவர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். 
சிறப்பு விருந்தினர்களுக்கு தலைமையாசிரியர் கோ.மூர்த்தி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். பெற்றோர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற மாணவர்களை பாராட்டினர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் புதிய முயற்சியாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.


Next Story