கரூரில் கறிக்கோழி விலை கிடுகிடு உயர்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 16 May 2022 11:28 PM IST (Updated: 16 May 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இறைச்சி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர், 
கறிக்கோழி விலை உயர்வு
தமிழகத்தில் உள்ள கோவை, வெள்ளக்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் கறிக்கோழிகள் அதிக அளவில் கரூர் மாவட்டத்திற்கு கொண்டு  வரப்படுகின்றன. இவ்வாறு கொண்டுவரப்படும் கறிக்கோழிகளை இறைச்சி கடைக்காரர்கள் வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் விற்பனை செய்யப்படும் கறிக்கோழிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.220-க்கு விற்பனையாகி வந்தது. தற்போது சில நாட்களாக விலை படிப்படியாக உயர்ந்து ரூ.260-க்கு விற்பனையாகி வருகிறது. 
ரூ.15 கூலி உயர்வு
இதுகுறித்து கரூர் மாவட்ட கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கறிக்கோழி பண்ணை விவசாயிகள், பெரிய நிறுவனங்களிடம் இருந்து கோழி குஞ்சுகளை வாங்கி பண்ணை அமைத்து அதை பராமரித்து வளர்த்து அந்த நிறுவனங்களிடம் திருப்பி செலுத்தி அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வளர்க்கும் பண்ணை விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு கூலியாக ரூ.10 வரை வழங்கி வந்தனர்.  தற்போது தண்ணீர் பிரச்சினை மற்றும் வேலை ஆட்கள் கிடைக்காமை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிலோவுக்கு ரூ.15 வழங்க வேண்டும் என பண்ணை வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். 
இதனால் பண்ணை வளர்ப்பு விவசாயிகள் கோழிகளை தற்போது வாங்கி வளர்ப்பதை நிறுத்தி உள்ளனர். இதனால் கறிக்கோழிகள் வரத்து குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கறிக்கோழியின் விலை தற்போது ரூ.260-க்கு விற்று வரும் நிலையில், விலை படிப்படியாக உயர்ந்து ரூ.300 வரை உயர வாய்ப்பு உள்ளது. என தெரிவித்தனர் கறிக்கோழியின் விலை உயர்வால் இறைச்சி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story