ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 May 2022 11:33 PM IST (Updated: 16 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

குடவாசலில் ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குடவாசல்
திருவாரூர் மாவட்டம்,  குடவாசல் கங்களாஞ்சேரி அருகே உள்ள சுரக்குடியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி யோகா (வயது 35). இவர் மஞ்சகுடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் எட்டியலூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தார். 
சங்கிலி பறிப்பு
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ஆசிரியை யோகாவின் கழுத்தில் அணிந்திருந்த  5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர்.
இதுகுறித்து, குடவாசல் போலீஸ் நிலையத்தில் ஆசிரியை யோகா கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப் இன்ஸ்பெக்டர் அமல்தாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story