திருவாரூரில் கனமழை


திருவாரூரில் கனமழை
x
தினத்தந்தி 16 May 2022 11:39 PM IST (Updated: 16 May 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

திருவாரூர்
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. திருவாரூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழையாக கொட்டித் தீர்த்தது.
 இந்த மழையினால் பள்ளி சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் வேலைக்கு சென்றவர்களும் சற்று சிரமம் அடைந்தனர். இருந்தாலும் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் கனமழை பெய்ததால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கூத்தாநல்லூர்
இதேபோல கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து மதியம் 2 மணியளவில் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, தென்கோவனூர், வடகோவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story