ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 300 மனுக்கள் பெறப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த்துறை கோரிக்கைகள் குறித்தும், வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டியும், மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல கோரிக்கைகள் என 300 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story