திருக்கோவிலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 30 ந் தேதி தொடங்குகிறது

திருக்கோவிலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி  வருகிற 30 ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 16 May 2022 11:40 PM IST (Updated: 16 May 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 30 ந் தேதி தொடங்குகிறது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(ஜூன்) 3-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். எனவே திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் நேரடியாகவோ, கிராம நிர்வாக அலுவலரிடத்திலோ அல்லது தாலுகா அலுவலகத்திலோ கொடுத்து பயன்பெறலாம் என திருக்கோவில் தாசில்தார் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story