ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழைபெய்தது. அரக்கோணத்தில் 55.5 மில்லி மீட்டர் பதிவானது.
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் வானில் கருமேகங்கள் திரண்டு பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழைக்கு பின்னர் தூறிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணி வரை 55.5 மி.மீ. மழை பதிவாகியது.
நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டியது. நேற்று திங்கட்கிழமை நெமிலி வாரச்சந்தை என்பதால் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
நெமிலி பஸ் நிலையம் மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதாலும், மழை நீர் வெளியேற போதிய வழி இல்லாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மழை நீரை உடனடியாக வெளியேற்றி மீண்டும் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சோளிங்கர்- 37.2, அம்மூர்-5, வாலாஜா- 4.1, காவேரிப்பாக்கம்- 4
Related Tags :
Next Story