மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும்
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம்
ஒவ்வொரு ஆண்டும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த 61 நாட்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க விசைபடகுகளுக்கு தடை விதிக்கப்படும்.
இந்த காலக்கட்டத்தில் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தடை காலத்தின் போது விசைபடகுகள், பைபர் படகுகளை சீரமைப்பது, என்ஜின் பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான செலவினங்கள் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
நிவாரணம் வழங்கவில்லை
இந்த நிலையில் அரசு அறிவித்த மீன்படி தடைக்கால நிவராணம் ரூ.5 ஆயிரம் இதுவரை மீனவர்களுக்கு வழங்கவில்லை. தடை காலத்தில் நிவராண தொகை கிடைத்ததால் தான் படகு சீரமைப்பு பணிகளுக்கு செலவு செய்ய முடியும்.
நிவாரண தொகை வழங்காததால் தங்கள் சொந்த பணத்தில் செலவு செய்து படகுகளை சீரமைப்பதால் மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீன்பிடி தடைக்கால நிவராணம் கிடைத்தால் மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
புதுச்சேரி அரசு தடை காலத்தில் ஆண்டுதோறும் விசைப்படகு சீரமைப்பு பணிக்காக ரூ.20 ஆயிரமும், பைபர் படகுக்கு ரூ.3 ஆயிரமும், ரேஷன் கார்டுக்கு ரூ.2,500-மும் வழங்கி வருகிறது.
இதேபோல தமிழக அரசும் வழங்க வேண்டும். தற்போது மீன்பிடி தடைக்கால நிவராணமாக தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்குவதை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story