ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு


ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2022 11:47 PM IST (Updated: 16 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதி கட்டிடத்துக்கு வெளியில் அமைந்துள்ள மின் கம்பத்தில் இருந்து விடுதிக்கு செல்லும் மின் வயர் ஆபத்தான நிலையில் இருந்ததை பார்த்து உடனடியாக மின்சார துறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் கலெக்டர் முன்னிலையில் சரி செய்யப்பட்டது. சமையல் அறையில் நீண்ட நாட்களாக பழுதாகி இருந்த மின் இணைப்பும் உடனடியாக சரி செய்யப்பட்டு எல்.இ.டி. விளக்கு பொருத்தப்பட்டது.

மாணவியர் தங்கியுள்ள இரண்டு அறைகளில் நீண்ட நாட்களாக மின்விசிறி பழுதடைந்திருந்ததால் உடனடியாக இரண்டு புதிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டது. மேலும் மாணவிகள் பயன்படுத்தும் தலையணை, உணவருந்தும் தட்டு இல்லாதவர்களுக்கு கலெக்டர் வழங்கினார். மாணவிகள் பாதுகாப்பான குடி நீரை அருந்தும் பொருட்டு சுடு தண்ணீர் வைக்கும் கருவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. கலெக்டரிடம் பொருட்களை பெற்றுக்கொண்ட மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

விடுதியினை சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ள விடுதி காப்பாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய் துறையினர், விடுதி காப்பாளர் உடன் இருந்தனர்.

Next Story