துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் துர்க்கையம்மன் தெற்கு முகம் பார்த்து, திரிபங்கி வடிவில், சிரித்த முகத்துடன் விஷ்ணு துர்க்கையாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி மாத பவுா்ணமியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story