அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வாலாஜாவில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாலாஜா ஒன்றியக்குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ரப்பாட்டத்தை தொடங்கிவைத்து கண்டன உரையாற்றினார்.
வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் விலை உயர்ந்த மரங்களான தேக்கு, வேங்கை, புங்கை மரங்களை அரசு அனுமதி பெறாமல் வெட்டி விற்றதற்கு கண்டனம் தெரிவித்தும், வாலாஜா ஒன்றியக் குழு தலைவர், உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story