பெண் மர்ம சாவு
கூடலூரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கூடலூர்:
கோம்பையை சேர்ந்த ரவி மனைவி மயில் (வயது 50). இவர், கூடலூர் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள கடைகள் முன்பு படுத்து தூங்குவது வழக்கம். இந்நிலையில் அவர் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு தலை, முகம் ஆகிய பகுதிகளில் காயங்களுடன், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூடலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் ேடாங்கரே, உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சினிமா தியேட்டர் பின்பகுதி வரை ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை.
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story