குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2¾ கோடி ஒதுக்கீடு
மேல்விஷாரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி கூட்டம் நகர மன்றத் தலைவர் எஸ்.டி.முஹம்மது அமீன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குல்சார் அஹமது, ஆணையாளர் பிரீத்தி, பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு புதிய பைப்லைன், பம்ப் அவுஸ் அமைத்திட ரூ.2¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவது, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆணையாளர் பிரீத்தி பேசுகையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாற்று ஏற்பாடாக மந்தார இலையை பயன்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டும். இதற்கு நகரமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story