தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு


தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
x
தினத்தந்தி 16 May 2022 6:48 PM GMT (Updated: 16 May 2022 6:48 PM GMT)

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

சிதம்பரம், 

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்களை அவ்வப்போது திறந்து பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில்  திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 12 லட்சத்து 4 ஆயிரத்து 262 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் உண்டியலில் 32 கிராம் தங்கம், 87 கிராம் வெள்ளி மற்றும் அமெரிக்க டாலர் 27, யூரோ 25, மலேசியா ரிங்கட் 10 ஆகியவையும் இருந்தது தெரியவந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது பணியாளர்கள் வாசு, ராமலிங்கம், ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story