கோவில் திருவிழாவில் பெண்ணிடம் நகை திருட்டு
சிவகாசி கோவில் திருவிழாவில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி (வயது 63). இவர் அதே பகுதியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சுந்தரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை யாரோ மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நகை திருடு போனதை உணர்ந்த மூதாட்டி சுந்தரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story