வீட்டில் மான் கொம்பு-தோல் வைத்திருந்த ஜோதிடர் கைது


வீட்டில் மான் கொம்பு-தோல் வைத்திருந்த ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 17 May 2022 12:24 AM IST (Updated: 17 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே வீட்டில் மான் கொம்பு, தோல் வைத்திருந்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் மான்தோல், மான்கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில், வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் ரெட்டியப்பட்டிக்கு சென்று வீடு, வீடாக சோதனை செய்தனர்.

 அப்போது ஒது வீட்டில் மான்தோல், மான்கொம்பு, நரிபல், ஆமை ஓடு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அதில், அவர் திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 46) என்பதும், ரெட்டியபட்டியில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஜோதிடம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 3 புள்ளிமான் தோல், 3 கடமான் கொம்பு, 6 நரி பல், 17 ஆமை ஓடு, 2 காட்டுப்பன்றி மண்டை ஓடு, 11 காட்டுப்பன்றி பல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 பின்னர் மான்தோல், மான்கொம்பு உள்ளிட்டவை சுந்தரமூர்த்திக்கு எப்படி கிடைத்தது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story