மணப்பாறை பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை-கே.என்.நேரு பேச்சு


மணப்பாறை பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை-கே.என்.நேரு பேச்சு
x
தினத்தந்தி 17 May 2022 12:35 AM IST (Updated: 17 May 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை-அமைக்கப்பட உள்ளது என்று கே.என்.நேரு கூறினார்.

சோமரசம்பேட்டை, மே.17-
ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கி பேசும்போது, கல்லூரி படிப்பை முடித்து நீங்கள் வேலை வாய்ப்பை பெறுகின்ற வகையில் மணப்பாறை பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிப்காட் வளாகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமையவுள்ளது. இதில் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெற்று பயனடைய முடியும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இந்த பகுதியை உயர்த்தும் பணியை ஆரம்பித்தார். அதனை வளர்க்க வேண்டிய பணி எங்களுடையது என்றார்.
விழாவில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இக்கல்லூரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் திருச்சி மண்டல கல்லூரி கல்விஇணைஇயக்குனர்மேகலாமாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் மலர்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story