குடமங்கலம் சுகவனேஸ்வரர் கோவில் பால்குட- காவடி திருவிழா


குடமங்கலம் சுகவனேஸ்வரர் கோவில் பால்குட- காவடி திருவிழா
x
தினத்தந்தி 17 May 2022 1:25 AM IST (Updated: 17 May 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

குடமங்கலம் சுகவனேஸ்வரர் கோவில் பால்குட- காவடி திருவிழா

திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள குடமங்கலத்தில் சுகவனேஸ்வரர்  கோவில் உள்ளது.  இங்கு முத்துமாரியம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இங்கு பால்குட-காவடி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அலகு காவடி, கரகம் வீதி உலாவும், கஞ்சி வார்த்தலும் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு முத்துமாரியம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குடமங்கலம் கிராமமக்கள், நாட்டாண்மைகள் ெசய்திருந்தனர்.

Next Story