பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்
பெட்ரோல், டீசல் வி்லை உயர்வுக்கான காரணம் குறித்து பா.ஜ.க.வுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயார் என திருக்காட்டுப்பள்ளியில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.
திருக்காட்டுப்பள்ளி:
பெட்ரோல், டீசல் வி்லை உயர்வுக்கான காரணம் குறித்து பா.ஜ.க.வுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயார் என திருக்காட்டுப்பள்ளியில் டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.
பொதுக்கூட்டம்
திருக்காட்டுப்பள்ளியில் தி.மு.க. சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாடிகன் நகரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயம் என்பவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது தமிழுக்கு அளித்த பெருமையாகும்.
தமிழ்நாட்டில் நடக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை உலகம் பாராட்டுகிறது. ஆட்சி திறமைக்கு அடித்தளமாக சிந்தாமல் சிதறாமல் கூட்டணிகளை அப்படியே வைத்திருக்கும் திறமை ஆளுமை மு.க. ஸ்டாலினிடம் உள்ளது.
மாநில சுயாட்சி
திராவிட மாடலுக்கு அடிப்படை மாநில சுயாட்சி. மாநில சுயாட்சியுடன் சமூக நீதி சேர்ந்தால் அது தான் திராவிட மாடல் என்பது. மாநில சுயாட்சி இல்லாததால் தான் நீட் தேர்வு எழுத வேண்டி உள்ளது.
தமிழகத்தில் 505 உறுதிமொழிகளை தேர்தலின்போது கொடுத்தோம். இதில் 300-க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றி நாங்கள் சாதித்து இருக்கிறோம்.
100 நாள் வேலை திட்டம் 150 நாளாக அறிவிக்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.36ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18 ஆயிரம் புதிய வகுப்பறை கட்டப்பட உள்ளது. உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவாதிக்க தயார்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை ரத்து செய்துள்ளோம். 13 ஆயிரம் கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி உள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் குறித்து பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றியக்குழு தலைவர்கள் செல்லக்கண்ணு, அரசாபகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story