திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 16 May 2022 9:29 PM GMT (Updated: 2022-05-17T02:59:44+05:30)

தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தக்கலை, 
தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
இளம்பெண் மாயம்
தக்கலை அருகே உள்ள கேரளபுரம், வேப்பங்கோணத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் மோனிஷா (வயது23), பட்டதாரி. இவருக்கும் குலசேகரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த மோனிஷா திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர்.
காதலனுடன் தஞ்சம்
இந்த நிலையில் மோனிஷா நேற்று இரவு 8 மணிக்கு வட்டம் காலனியை ேசர்ந்த அனிஷ் (26) என்ற வாலிபருடன் தக்கலை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர்கள் போலீசாரிடம் கூறும் போது, தாங்கள் இருவரும் 3 மாதமாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மணலியில் உள்ள ஒரு இந்து கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினர்.
இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது மோனிஷாவின் பெற்றோர் மகளின் திருமணத்தில் உடன்பாடில்லை என கூறினர்.
ஆனால் இருவரும் திருமண வயதை எட்டியுள்ளதால் போலீசார் அவர்களை சேர்த்து வைத்து அனுப்பினர்.

Next Story