மனைவி பிரிந்து சென்றதால் வேதனை:தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி பக்கமுள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதனால் மன வேதனை அடைந்த இளங்கோவன் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story