களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா
களைகட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா
கொட்டாம்பட்டி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வலையங்குளத்துப்பட்டியில் பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அங்குள்ள வலையன் கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையால் கடந்தாண்டு நிரம்பியது. தற்போது கோடை காலம் ெதாடங்கி தண்ணீர் வற்றிய நிலையில் கண்மாயில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.
அதிகாலையில் கிராம முக்கிய பிரமுகர்கள் சாமி கும்பிட்டு வெள்ளை துண்டுகளை அசைத்தனர். இதைதொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க கண்மாயில் இறங்கினர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை பொதுமக்கள் உற்சாகமாக பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து இறைவனுக்கு படைத்து உண்ணுவர். இதுபோன்று பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story