திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம்
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம்
மதுரை
திருச்சியை சேர்ந்தவர் ராம ஜெயம். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் மாதம் 29-ம் தேதி கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் சென்றது. அவர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்து உள்ளனர். இந்த போஸ்டர் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story