காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுடுவதற்கு அரசு அனுமதிக்க வலியுறுத்தல்


காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுடுவதற்கு அரசு அனுமதிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 May 2022 3:36 AM IST (Updated: 17 May 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுடுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வரும் மின்மாற்றிகள் பழுதடைந்தால், அதனை விதிப்படி 48 மணி நேரத்திற்குள் பழுது நீக்கி மின் வினியோகம் தடையின்றி கிடைத்திட செய்ய வேண்டும். மின் வாரியத்தில் இருந்து தளவாட ெபாருட்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல போதிய வாகனங்கள் வழங்கிட வேண்டும். தமிழக அரசு 2022-23-ம் ஆண்டிற்கு 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்த கோட்டாவில் சாதாரண முன்னுரிமையில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அரசியல் பாகுபாடின்றி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைப்போல், பெரம்பலூர் மாவட்டத்திலும் விவசாய நிலங்களில் சேதாரம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை பெறாமல் வேப்பந்தட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதை பற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்த அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story