கொடவா சமுதாய முறைப்படி சேலையில் தோன்றிய நடிகை ரஷ்மிகா


கொடவா சமுதாய முறைப்படி சேலையில் தோன்றிய நடிகை ரஷ்மிகா
x
தினத்தந்தி 16 May 2022 10:20 PM GMT (Updated: 2022-05-17T03:51:03+05:30)

கொடவா சமுதாய முறைப்படி சேலையில் தோன்றிய நடிகை ரஷ்மிகா

குடகு: கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு, தமிழ் திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்ததால் ஐதராபாத்திலேயே இருந்து வருகிறார். ஆனால் இவரது பூர்வீகம் குடகு மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குடகில் இவரது தோழி ஒருவருக்கு திருமணம் நடந்தது. 

இதில் கலந்து கொள்ள திட்டமிட்ட நடிகை ரஷ்மிகா திடீரென விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்று திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் கொடவா சமுதாய முறைப்படி சேலை கட்டி இருந்தார். மேலும் அவர் மணப்பெண் மற்றும் தனது தோழிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரஷ்மிகாவின் ரசிகர்கள் பலரும் கொள்ளை அழகு என்று அவரை வர்ணித்து வருகிறார்கள். 


Next Story