கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 12:25 PM IST (Updated: 17 May 2022 12:25 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டு மனை பட்டா என 237 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை வழங்கினார்.

இதனையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அரசு திட்டங்களில் கட்டப்படும் வீடுகள், கழிவறைகள், பட்டியல் தொகை நிலுவை, காலதாமதம் போன்ற காரணங்களுக்காக புகார் தெரிவிக்க ஏதுவாக உதவி மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 9444501111 மற்றும் வாட்ஸ்அப் எண் 8438950148 ஆகிய எண்களை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் கருவியை வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வித்யா, (தேர்தல்) முரளி, தனித் துணை கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story