திருச்செந்தூரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு
திருச்செந்தூரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் கட்ட நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய பஸ்நிலையம் கட்ட நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கவுன்சில் கூட்டம்
திருச்செந்தூர் நகராட்சி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் வேலவன், துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு கணேசபுரம், 8-வது வார்டு, 10-வது வார்டு மற்றும் 19-வது வார்டு உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது எனவும், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தொட்டிகளை பராமரித்தும், புதிய தொட்டிகள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் நகராட்சி தேவைக்கு 20 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்குவது எனவும், அமலிநகர் முதல் முத்துமாலை அம்மன் கோவில் தெரு வரையிலும், ஜீவா நகர் முதல் கல்யாணசுந்தர விநாயகர் கோவில் தெரு வரையிலும் மற்றும் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் முதல் எடிசன் ஆஸ்பத்திரி எதிர்புறம் வரை புதிதாக பிரதான குடிநீர் குழாய் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
ரூ.15 கோடியில் புதிய பஸ்நிலையம்
திருச்செந்தூர் நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவது, ரூ.15 கோடி மதிப்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் அருகில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.5 கோடி மதிப்பில் தினசரி சந்தை கட்டிடம் கட்டுதல், 2 கோடி மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைத்தல், ரூ.36 லட்சம் செலவில் திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகில் மாட்டுத்தாவணியில் புதிதாக கழிப்பிடம் கட்டுதல் மற்றும் ரூ.6 லட்சத்தில் புதிதாக நகர்ப்புற காடுகள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story