விளாத்திகுளத்தில் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்


விளாத்திகுளத்தில் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 17 May 2022 5:29 PM IST (Updated: 17 May 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

எட்டயபுரம்:
தமிழக அரசின் நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின்கீழ்  விளாத்திகுளத்தில், மாவட்ட சுகாதார துறையும், வட்டார மருத்துவ குழுவினரும் இணைந்து பொதுமக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தனர். வட்டார அளவில் நடைபெற்று வரும் இந்த நடமாடும் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக ரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், எக்கோ உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும், டாக்டர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவ முகாமில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும் நடைபெற்றது. இதில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதேபோன்று எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ரத்த அளவு, சர்க்கரையின் அளவு மற்றும் பரிசோதனை செய்து கொண்டனர்.

Next Story