மும்பையில் நடந்த விழாவில் 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு


மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘உதய்கிரி‘ போர்க்கப்பலின் பிரமாண
x
மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘உதய்கிரி‘ போர்க்கப்பலின் பிரமாண
தினத்தந்தி 17 May 2022 5:29 PM IST (Updated: 17 May 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடந்த விழாவில் 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பை, 
மும்பையில் நடந்த விழாவில் 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
 2 போர்க்கப்பல்கள்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சூரத்', ‘உதய்கிரி' ஆகிய 2 போர்கப்பல்களை கடற்படையில் சேர்க்கும் விழா இன்று மும்பை மஜ்காவ் டாக்கில் நடந்தது. விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 2 போர் கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். 
ஒரே நேரத்தில் 2 போர் கப்பல்களின் சேவை தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பெயர் காரணம்
இந்த போர் கப்பல்கள் மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் 'சூரத்' 15-பி டெஸ்டிராயர் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 4-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு மேற்கு இந்தியாவில் மும்பைக்கு அடுத்தப்படியாக பெரிய வணிக மையமாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘உதய்கிரி' 17-ஏ பிரிகேட்ஸ் திட்டத்தின் கீழ் தயாரான 3-வது போர்க்கப்பல் ஆகும். இதற்கு ஆந்திராவின் மலைச்சிகரமான உதய்கிரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
இந்த கப்பல்களில் நவீன ஆயுதங்கள், சென்சார்கள், பிளாட்பாரம் நிர்வாக திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதாக கடற்படை தெரிவித்து உள்ளது.
---------------


Next Story