சிவ்ரியில் 430 கிலோ கலப்பட தேயிலை தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்- 2 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 17 May 2022 6:19 PM IST (Updated: 17 May 2022 6:48 PM IST)
t-max-icont-min-icon

சிவ்ரியில் 430 கிலோ கலப்பட தேயிலை தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
சிவ்ரியில் 430 கிலோ கலப்பட தேயிலை தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவல்
மும்பை சிவ்ரி ராம்காட் குடிசை பகுதியில் போலி தேயிலை தூள் பார்சல்கள் பதுக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து மொத்த, சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் கடந்த 14-ந்தேதி காலை 11 மணி அளவில் குடோனிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். 
இச்சோதனையில் ராகுல் சேக் (வயது26), ராஜூ சேக் (29) ஆகிய 2 பேர் தேயிலை தூளுடன் வாசனை ரசாயன பவுடரை கலப்படம் செய்து பாக்கெட்டுகளாக வைத்து இருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அங்கிருந்து கலப்படம் செய்யப்பட்ட 430 கிலோ எடையுள்ள தேயிலை தூள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் உரிமம் இன்றி குடோன் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 
மேலும் அவர்கள் கலப்பட தேயிலை தூள் வினியோகம் செய்த இடங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story