கோவில்பட்டியில் வேனில் ரேஷன் அரிசி மாவு கடத்த முயன்ற 2 பேர் கைது

கோவில்பட்டியில் வேனில் ரேஷன் அரிசி மாவு கடத்த முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2022 7:24 PM IST (Updated: 17 May 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வேனில் கடத்த முயன்ற 100 மூட்டை ரேஷன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அரவை ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வேனில் கடத்த முயன்ற 100 மூட்டை ரேஷன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அரவை ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி மாவு
கோவில்பட்டி பூர்ணம்மாள் காலனி பகுதியில் ரேஷன் அரிசியை மாவாக்கி சிலர் கடத்துவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள அரவை ஆலையில் இருந்து 100 மூட்டைகளை சிலர் வேனில் ஏற்றுக்கொண்டிருந்தனர். உடனடியாக போலீசார் அந்த மூட்டைகளை சோதனையிட்ட போது, ரேஷன் அரிசியை மாவாக்கி, மூட்டைகளில் கட்டி வெளியூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
ஆலை உரிமையாளர் கைது
இதையடுத்து அரவை ஆலை உரிமையாளர் சிவா (வயது 24), வேன் ஓட்டுநர் மகாராஜா (20) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், தலா 50 கிலோ கொண்ட 100 மூட்டை ரேஷன் அரிசி மாவையும், வேனையும் பறிமுதல் செய்து, தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதே போல வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் மகாராஜா என்பவரிடம் 10 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story