வட இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கவும்- ராஜ் தாக்கரேக்கு அத்வாலே வலியுறுத்தல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 17 May 2022 7:28 PM IST (Updated: 17 May 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தி பயணத்திற்கு முன்பு வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தினார்.

தானே, 
அயோத்தி பயணத்திற்கு முன்பு வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தினார். 
 அனுமதிக்க மாட்டோம்
 நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடந்த மாதம் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 இந்த நிலையில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே அடுத்த மாதம் 5-ந் தேதி அயோத்தி செல்வதாக தெரிவித்தார். ஆனால் இவரின் அயோத்தி வருகைக்கு பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 வட இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்கும் வரை உத்தரபிரதேசத்திற்குள் அவரை நுழைய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். 
பட்னாவிஸ் சரியான தேர்வு
 இதுகுறித்து மந்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “ அயோத்தி செல்லும் முன்பு வட இந்தியர்களிடம் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். 
மேலும் மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான ராவ்சாகேப் தன்வே, பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக பார்க்க விரும்புவதாக தெரிவித்த கருத்தை ஆதரித்த அவர், ஒரு பிராமண முதல்-மந்திரி தேவை என கூறினார். மேலும் தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தின் உயர் பதவிக்கு சரியான தேர்வு என்று தெரிவித்தார். 
 இதேபோல மராட்டியத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சிவசேனா ஒரு மோசமான தவறை செய்துவிட்டதாக அவர் விமர்சித்தார். 

Next Story