குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. எனினும் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கிறார்கள்.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. எனினும் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கிறார்கள்.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் கொட்டியது. நேற்று முன்தினம் தண்ணீர் சுமாராக விழுந்தது.
தண்ணீர் வரத்து குறைந்தது
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவியில் மிகவும் குறைவாக தண்ணீர் விழுந்த போதிலும், அதில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.
குற்றாலத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்தால் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை இந்த மாத இறுதியில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே இந்த மழை பெய்ததும் சீசன் களை கட்டும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story