அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
தென்காசியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சலீம் முகமது மீரான் தலைமை தாங்கினார். துணை தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார். செயலாளர் சுந்தரமூர்த்தி நாயனார் தொடக்க உரையாற்றினார்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி மருத்துவச் செலவை திரும்பப் பெற பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அதனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கூடுதல் ஓய்வூதியம் பெறும் தகுதியான வயதை 80-ல் இருந்து 70-ஆக குறைக்க வேண்டும். கடந்த 1-4- 2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி பணியமர்த்தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் மின்வாரிய அமைப்பின் மாவட்ட செயலாளர் காந்தி, அரசு போக்குவரத்து அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்க மாநில தலைவர் நாராயணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சங்க மாவட்ட தலைவர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story