காவலாளிகள் துரத்தியபோது கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து திருடன் பலி
கட்டிடத்தில் திருட முயன்றபோது காவலாளிகள் துரத்தியதால் கீழே விழுந்து ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
தானே,
கட்டிடத்தில் திருட முயன்றபோது காவலாளிகள் துரத்தியதால் கீழே விழுந்து ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
வீடு புகுந்து திருட்டு
டோம்பிவிலி கம்பல்பாடா பகுதியில் உள்ள கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் புகுந்தனர். அப்போது அங்கிருந்த காவலாளிகள் திருடர்களை கண்டு அவர்களை பிடிக்க விரைந்தனர். உடனே 2 பேரும் காவலாளிகளிடம் பிடிபடாமல் இருக்க இரும்பு குழாய் மூலம் கீழே இறங்க முயன்றனர்.
அப்போது இரும்பு குழாய் வழுக்கியதால் 2 பேரும் கட்டிடத்தின் உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
ஒருவர் பலி
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த திலக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த திருடனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர் முகமது பட்கர் மற்றும் காயமடைந்தவர் அர்பான் பிஞ்சாரி என்று தெரியவந்தது.
Related Tags :
Next Story