நித்யகல்யாணி அம்மன் கோவில் கொடை கால்நாட்டு விழா
செங்கோட்டை நித்ய கல்யாணி அம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டுடன் தொடங்கியது.
செங்கோட்டை:
செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் கொடைவிழா நேற்று கால்நாட்டுடன் தொடங்கியது.
இதையொட்டி அங்குள்ள கீழத்தெரு வீரகேரள விநாயகா் கோவிலில் விநாயகா், வள்ளிதெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னா் சமுதாய பெரியோர் மற்றும் விழா கமிட்டியினர் முன்னிலையில் பந்தகாலுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து கோவிலில் நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு கோவில் வளாகத்தில் கொடைவிழாவிற்கான திருக்கால் நட்டப்பட்டு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாய பெரியோர்கள், விழா கமிட்டி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கின்றது. விழா நாட்களில் அம்மன் சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளிப்பார். மேலும் சிறப்பு பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், கும்மிப்பாட்டு, கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றது.
கொடை விழாவான வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், 11 மணிக்கு குங்கும அபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல், 5 மணிக்கு முளைப்பாரி, அக்னிசட்டி ஊர்வலம், 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு நித்யகல்யாணி அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வருதல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story