ஜக்கனாரை ஊராட்சி சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு
ஜக்கனாரை ஊராட்சி சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜாரில் அமைந்துள்ள ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம் முன் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் சுமதி சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் மூர்த்தி மற்றும் மன்ற உறுப்பினர் மனோகரன் பேசுகையில், பிளாஸ்டிக் பை பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் 'மஞ்சப்பை திட்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. எனினும் அரவேனு வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் ஆகியவற்றைக் கொண்டு வராமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் குறித்து ஊராட்சி சார்பில் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story