கோவில்பட்டியில் கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டம்


கோவில்பட்டியில் கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 8:37 PM IST (Updated: 17 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையத்தின் வடக்குப் புறத்தில் மூப்பன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும், பெரிய கண்மாய் உள்ளது. இந்த கிராமத்திற்கு கண்மாய் கரை வழியாக அமைக்கப்பட்ட பாதையை கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டியில் ரெயில் நிலையத்தில் இரட்டைரெயில் பாதை அமைக்கப்பட்ட வடக்கு பகுதியில் சரக்கு குடோன் கட்டுவதற்காக மூப்பன்பட்டி செல்லும் பாதையை மூடும் பணி நேற்று தொடங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்துத் தலைவர் லிங்கேஸ்வரி  தலைமையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினா். இதனை தொடர்ந்து கட்டிட மேற்பார்வையாளரை போலீசார் அழைத்து கட்டிட பணியை தற்காலிகமாக நிறுத்தவும், பேச்சு வார்த்தைக்கு பின்னர் தொடங்குமாறும் கேட்டு கொண்டனர். இதனால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story