கார் விபத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 17 May 2022 8:44 PM IST (Updated: 17 May 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கார் விபத்தில் எம்.எல்.ஏ. மயிரிழையில் உயிர் தப்பினார்.

மும்பை, 
மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கார் விபத்தில் எம்.எல்.ஏ. மயிரிழையில் உயிர் தப்பினார். 
கார் விபத்து
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சங்கராம் ஜக்தாப் (வயது36). இவர் காரில் புனேயில் இருந்து மும்பை நோக்கி எக்ஸ்பிரஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். டிரைவர் மற்றும் அவருடன் 2 பேர் காரில் இருந்தனர். 
 ராய்காட் மாவட்டம் படான் குகை அருகே கார் வந்த போது முன்னால் சென்று கொண்டு இருந்த பஸ்சின் பின்புற பக்கவாட்டில் திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. சங்கராம் ஜக்தாப் எம்.எல்.ஏ. உள்பட காரில் இருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
காரணம் என்ன?
சாலை பணி நடந்து கொண்டு இருந்ததை பஸ் டிரைவர் திடீரென கவனித்தபோது, அவர் பஸ்சை திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது 
 இதற்கிடையே யாரும் புகார் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யவில்லை என ராய்காட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக் துதே தெரிவித்தார்.



Next Story