புறம்போக்கு இடம் எனக்கூறி கம்புகள் நட்டு குடிசைகள் அமைக்க முயற்சி


புறம்போக்கு இடம் எனக்கூறி கம்புகள் நட்டு குடிசைகள் அமைக்க முயற்சி
x
தினத்தந்தி 17 May 2022 8:53 PM IST (Updated: 17 May 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

புறம்போக்கு இடம் எனக்கூறி, இரவோடு இரவாக கம்புகள் நட்டு குடிசைகள் அமைக்க முயற்சித்தனா்.

சத்தியமங்கலத்தில் சத்தி- கோவை ரோட்டில் பழைய அரசு போக்குவரத்து அலுவலகம் எதிரே புறம்போக்கு இடம் இருப்பதாக வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த இடத்தில் குடிசைகள் அமைப்பதற்கு அடையாளமாக கம்புகளை நட்டு வைத்தார்கள். 
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, தாசில்தார் ரவிசங்கர், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குடிசை அமைக்க முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த இடம்  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் புறம்போக்கு இடம் ஆகும். இதை மற்றவர்களுக்கு பட்டா வழங்க முடியாது,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story