செஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
செஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சி நகர ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செஞ்சி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், கஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் ஆட்டோக்களை சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. ஆட்டோக்களில் அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கக்கூடாது. ஆட்டோ ஓட்டுனர்கள் எப்போதும் சீருடையில் இருக்க வேண்டும். ஆட்டோ மற்றும் ஓட்டுனர் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் செஞ்சி நகர அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story