2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை


2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 17 May 2022 9:00 PM IST (Updated: 17 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கண்டக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் வெவ்வேறு இடங்களில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கண்டக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
காரைக்கால் சின்னகண்ணு செட்டி தெருவை சேர்ந்தவர் நவாஸ் (வயது 40). இவர் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் காரைக்கால் நகர் பகுதியில் தண்ணீர் கேன் போடும்போது, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. 
நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் காரைக்கால் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவாசை கைது செய்தனர்.
கண்டக்டர் கைது
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (36). தனியார் பஸ் கண்டக்டர். இவர் காரைக்காலை அடுத்த பூவம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுவை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story