தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு


தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 17 May 2022 9:07 PM IST (Updated: 17 May 2022 9:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே பழையகாயலை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் இவர் தூத்துக்குடியில் இருந்து பழையகாயல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். முள்ளக் காட்டைக் கடந்து பொட்டல்காடு விலக்கு அருகே சென்றபோது, எதிரே திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் பாலமுருகன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பாலமுருகனை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும்  வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story