மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொழில் அமைப்பினர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

திருப்பூர்
திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொழில் அமைப்பினர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
உண்ணாவிரத போராட்டம்
நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி தொழிலை பாதுகாக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி வரவேற்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். உண்ணாவிரத போராட்டத்துக்கு பின்னலாடை தொழில் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் மைக்கோ வேலுச்சாமி, சைமா பொதுச்செயலாளர் எம்பரர் பொன்னுச்சாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், செயலாளர் செந்தில், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், செயலாளர் முருகசாமி, திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், நிட் காம்பேக்டிங் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பவர்டேபிள் சங்க செயலாளர் நந்தகோபால், செக்கிங் அண்ட் அயர்னிங் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், கணினி பிரிண்டிங் சங்க தலைவர் சிவக்குமார் உள்பட அனைத்து பின்னலாடை தொழில் சார்ந்த நிர்வாகிகள், ஜாப்ஒர்க் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
பஞ்சு பதுக்கலை தடுக்க வேண்டும்
மேலும் சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மைதிலி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். கோவை பி.ஆர்.நடராஜன் எம்.பி. உண்ணாவிரதத்தை மாலையில் நிறைவு செய்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். பஞ்சு பதுக்கலை தடுக்க வேண்டும் என்று கூறினோம். கேட்கவில்லை. இப்போது நூல் விலை உயர்ந்து விட்டது. நாங்கள் 7 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நடத்தலாம் என்று கூறினோம். ஆனால் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் 2 நாட்கள் போதும் என்றார்கள். வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கோவை பஞ்சாலை முதலாளிகளும், திருப்பூர் பனியன் முதலாளிகளும் பருத்தி பஞ்சு உற்பத்தியை பெருக்குவது எப்படி என யோசனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நாளை (இன்று) காலை தமிழக முதல்-அமைச்சரையும், டெல்லி சென்று மத்திய அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

Next Story