என்ஜினீயரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டத்தில் கைது


என்ஜினீயரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 May 2022 9:18 PM IST (Updated: 17 May 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரை கொலை செய்த வழக்கில் கைதான அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டத்தில கைது செய்யப்பட்டனா்.


கடலூர், 

பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் தர்மதுரை (வயது 23). இவர் பொன்னேரியே சேர்ந்த புனிதவள்ளி என்பவருக்கு ரூ.5 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.

 இதையடுத்து கொடுத்த பணத்தை தர்மதுரை, புனிதவள்ளியிடம் திருப்பி கேட்ட போது, அவருடன் வேலைக்கு சென்று வந்த கருங்குழிதோப்பை சேர்ந்த ஆனந்தன் மகன் கொத்தனார் ஆனந்தபாபு என்பவர் அந்த பணத்தை தான் தருவதாக கூறியுள்ளார்.

அதன்பிறகு தர்மதுரை, ஆனந்தபாபுவிடம் பணத்தை கேட்ட போது, அவர் கொடுக்க மறுத்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பெண்ணாடம் பஸ் நிலையத்தில் ஆனந்தபாபு, திட்டக்குடி அருகே உள்ள கூடலூரை சேர்ந்த என்ஜினீயர் உதயராஜ் (29) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

2 பேர் கைது

அப்போது அங்கு தர்மதுரை, தனது தம்பி ராஜதுரை மற்றும் 9 பேருடன் வந்து ஆனந்தபாபுவை தாக்கினார். இதை தடுக்க முயன்ற உதயராஜையும் அவர்கள் தாக்கினர். இதில் உதயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரை, ராஜதுரை உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

மேலும் தர்மதுரை, ராஜதுரை ஆகியோரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். 

அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜதுரை, தர்மதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவர்களிடம் வழங்கப்பட்டது.


Next Story