கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்


கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 May 2022 9:23 PM IST (Updated: 17 May 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை தேசியஜூனியர் ஆக்கி போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை தேசிய  ஜூனியர் ஆக்கி போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டிகள் நேற்று தொடங்கின.
காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ஆக்கி பீகார் அணியும், அசாம் அணியும் மோதின. இதில் 11 - 1 என்ற கோல் கணக்கில் பீகார் அணி வெற்றி பெற்றது. இதில் மோனோகுமார் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
காலை 8.15 மணிக்கு நடந்த 2-வது ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் அணி,  அருணாசலபிரதேசம் அணியும் மோதின. இதில், 5 - 0 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேசம் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த லவ்பிரீத் சிங் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
காலை 10 மணிக்கு நடந்த 3-வது ஆட்டத்தில் கோன்ஸ்  அணியும்,  ஜார்கண்ட் அணியும் மோதின. இதில், 10 - 0 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், ஆசிம் டர்க்கி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.
கனிமொழி எம்.பி.
மாலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி ஒருங்கிணைப்பு குழு துணைத் தலைவர் கே.ஆர்.அருணாச்சலம், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ. மனோகரன், நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன்,  தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலையில் நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின. இதில் 3 - 1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராக தமிழ்நாடு அணி வீரர் சதீஷ் தேர்வு செய்யப் பட்டார்.
தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில் அரியானா அணியும் கேரளா ஆக்கி அணியும் மோதின.
இன்று 18-ம் தேதி காலை 6.30 மணிக்கு டெல்லி அணியும், உத்திரகாண்ட் அணியும் மோதுகின்றன.
காலை 8.15 மணிக்கு பஞ்சாப் அணியும், ஆந்திர பிரதேசம் அணியும் மோதுகின்றன.
மாலை 6 மணிக்கு மணிப்பூர் அணியும், திரிபுரா அணியும் மோதுகின்றன.

Next Story