செஞ்சியில் மாவீரன் ராஜாதேசிங்குக்கு சிலை கலெக்டரிடம் மனு


செஞ்சியில் மாவீரன் ராஜாதேசிங்குக்கு சிலை கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 May 2022 9:27 PM IST (Updated: 17 May 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் மாவீரன் ராஜாதேசிங்குக்கு சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம், 

செஞ்சி மாவீரன் ராஜாதேசிங்கு மற்றும் ராணிபாய் வம்சாவழியினரான ராஜாதேசிங்கு ராஜ்புத் பொந்தில் சேனா அமைப்பின் நிர்வாகி ஸ்ரீதர்சிங் தலைமையில் அந்த அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ராஜாதேசிங்கு வம்சா வழியினரான எங்களின் வேண்டுகோளை ஏற்று அரசு சார்பில் அல்லது எங்களது அமைப்பின் சார்பில் சொந்த செலவில் மாவீரன் ராஜாதேசிங்கிற்கு சிலை வைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும். ராஜாதேசிங்கை போற்றும் வகையில் செஞ்சிக்கோட்டை செல்லும் நுழைவுவாயில் அல்லது செஞ்சி நான்குமுனை சந்திப்பு போன்ற ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

Next Story